1995 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு செயலாற்றும் தமிழர்களைத் தெரிந்தெடுத்து திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று 'பெரியார்' பெயரில் விருது வழங்கி வரும் 'தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்'
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29ஆம் ஆண்டு விழா சார்பில் திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கல்வி, மொழி, கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த பெருமக்களுக்கு "பெரியார் விருது" வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.
நமது இனம், பண்பாட்டு அடிமைத்தனத்திற்கு ஆளாகியிருப்பதிலிருந்து மீளவே இதுபோன்ற விழாக்களை நாம் நடத்துகின்றோம்.
பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து மீள்வது சுலபமல்ல. காரணம், இது மூளையைப் பற்றி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதற்கு பகுத்தறிவு சார்ந்த வழிகாட்டுதலே சரியானது…